என்னிடம் இருக்கும்
எந்த அழகு சாதனத்தை
விடவும்
உன் ஒற்றைப் பார்வை
என்னை அழகாக்கி விடுகிறது.
Tuesday, November 16, 2010
தேவதைகளின் தேவதை

வெள்ளைத் திரைமூடி
தாளுக்குள் ஒளிந்திருந்த தேவதை,
வண்ணத்தூரிகையால் நீ திரைவிலக்கியதும்,
உன் பேரழகைக் கண்ட அதிர்ச்சியில்
ஓவியமாக உறைந்து போகிறாள்!
*
உன்னைத்தொட்டுவிடும்
கடைசி ஆசையில் வானத்து தேவதைகளெல்லாம்
துளித்துளியாய் விழுந்து செத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நீயோ குடைப்பிடித்து புறக்கணிக்கிறாய்.
*
தமிழ்ச்சொற்களாக மாறி உன்னிடம்
தவம் கிடக்கின்றன் தேவதைகள்.
நீயோ ஆங்கிலத்தில் கவிதையெழுதுகிறாய்.
தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னை நச்சரிக்கின்றன தேவதைகள்!
*
சில கணமேனும்
உன்னைப்போல் அழகாகும் ஆசையில்
நீ முகம் பார்க்கும் கண்ணாடியாக
மாறிவிடத் துடிக்கின்றன தேவதைகள்.
*
மின்சாரம் போன இரவுகளில்
மின்னலைக் கண்டு ஒளியாதே.
இருட்டில் உன்னைக் காணாமல்
மின்னலடித்து தேடுகின்றன தேவதைகள்!
Friday, November 12, 2010
உன் நினைவோடுதான்...
Subscribe to:
Posts (Atom)





