வெப்பத்தின் மிகுதியில்
ஒவ்வொரு இதழாக
உதிர்ந்து
சாம்பல் குவியலானது
என்னுடல்.
நீல நிற பூக்கள்
சிலவற்றை
குவியல்மீது வைத்து
திரும்பி செல்கிறாய்
வீழ்ந்த சாம்பல்
காற்றில் கரைந்து
மறைகிறது.
எவ்வித மாற்றங்களுமின்றி
உன்னுலகில் இப்போதும்
பெய்துகொண்டிருக்கிறது அதே மழை.
ஒவ்வொரு இதழாக
உதிர்ந்து
சாம்பல் குவியலானது
என்னுடல்.
நீல நிற பூக்கள்
சிலவற்றை
குவியல்மீது வைத்து
திரும்பி செல்கிறாய்
வீழ்ந்த சாம்பல்
காற்றில் கரைந்து
மறைகிறது.
எவ்வித மாற்றங்களுமின்றி
உன்னுலகில் இப்போதும்
பெய்துகொண்டிருக்கிறது அதே மழை.
No comments:
Post a Comment