Thursday, November 18, 2010


என்னைத்தானே வசியம் செய்தாய்..!
என் பேனாவை எப்படி
வசியம் செய்தாய்..?
பார்… அது எப்போதும்
உன் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருக்கிறது..!  

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh
 


ஆளரவமற்ற பாலைவனத்தில்
அனாதையாய் உனைத்
தேடுகின்றேன்..!
நீ போன வழியினைத்
தேடித் தேடி
ஓடாய்த் தேய்ந்தபடி
உனைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு நாள்
சூரியன் உதிக்கும் போதெல்லாம்
என் காதலை எப்படியும்
கண்டு பிடித்துவிடுவேன்
என்ற நம்பிக்கையை மட்டும்
தேய்த்து விடாமல்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh







நான் துவண்டு கிடக்கும் வேளையில்
உன் மலரினும் மெல்லிய
மடியினில் எனைக் கிடத்தி...
என் தலையைக் கோதி தேற்றுவாய்..!
நான் வீழ்ந்து கிடக்கும் வேளையில்
எனை உன் வீணை மார்பில் சாய்த்து...
என் விம்மலைத் தணிப்பாய்..!
நான் கோபித்துக் கிடக்கும் வேளையில்
கொவ்வை இதழ் முத்தம் தந்து...
என் கோபத்தை உடைத்தெறிவாய்..!
இத்தனையும் எனக்குச் செய்யும்
பனி நிறை பவழ மலரவளே..!
என் இன்பத்தில் மட்டுமின்றி...
என் துன்பத்திலும் இருந்தவளே...
இருளில் நான் இருந்தபோது
நிலவாய் வெளிச்சம் தந்தவளே..!
உன்னை நானும் மறப்பேனா..?
உன் நினைவைத் துறந்து இருப்பேனா..?
மறந்தும் உயிரோடிருப்பேனா..?
நிலவைப்பிரிந்து என்றும் நீலவானம் இராது..!
அதுபோலத்தான் பெண்ணே நானும்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



நீ யார்..?
என்ன உன் பேர்..?
ஏது உந்தன் ஊர்..?
இவைகளை நான்றியேன்…
ஆனால்…
உனைப் பார்த்த வினாடியிலிருந்து
இனி நீதான் நான்…
உன் பேர்தான் இனி என் பேர்…
உன் ஊர்தான் இனி என் ஊர்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh





உன்னை நினைத்தாலே போதும்
என் பேனாவிற்கு…
உடனே அது காகிதத்தை
முத்தமிடத் தொடங்குகிறது..!
உனைப் பற்றி
கவிதையாய் வடிப்பதற்கு..!
உன்னை நான் நேரில்
சந்தித்தால் போதும்…
உடனே உன் செவ்விதழில்
முத்தமிடத் தோன்றுகிறது…
உன்னைப் போன்றதொரு
அழகான கவிதையைப் படைப்பதற்கு..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh




உனக்குத் தாலாட்டுப் பாட...
நிலவை உன்னறைக்குள்
வரும்படி அழைத்தேன்…
வெள்ளி நிலவும்
வெளிச்சப் புன்னகையோடு
இசைந்தது..!
உன்னறைக்குள் நுழைந்தது..!
உனைப் பார்த்ததும்
உறைந்து போனது நிலா…
காரணம்..?
நிலவின் 'க்ளோனாம்' நீ..! 

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



உலகிலேயே மிகவும்
அழகான கவிதை ஒன்று
சொல் என்றார்கள்..!
நான் உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



நீ என்னருகில் இருக்கும் வரை
உலகத்தையே மறந்திருக்கிறேன்..!
நீ என்னை விட்டு்ப் பிரிந்து சென்றால்
இந்த உலகமே என்னை மறக்கும்படி
செய்து கொள்கிறேன்..!
ஏனடா எனக்கிந்த காதல் வேதனை..?

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh




என்னை மட்டுமல்ல
என் நினைவுகளையும் சேர்த்து
வசியம் செய்திருக்கிறாய்
என்பதை…
நீ என்னருகே
இல்லாத போதுதான்
உணர்ந்து கொண்டேன்..!

                    *** + ***

பெண்ணே…
உன் மீன் விழிகளை
மூடிக் கொள்..!
மீனவன் வலையுடன்
வந்து கொண்டிருக்கிறான்..!

                    *** + ***
அழகின் சிகரம் நீ…
அறிவின் சிகரம் நீ…
பெண்மையின் சிகரம் நீ…
பேரழகின் சிகரம் நீ…
பொறுமையின் சிகரம் நீ…
பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!

                    *** + ***

நடமாடும் நூலகத்தைக்
கண்டேன்
நடமாடும் வங்கியைக்
கண்டேன்
நடமாடும் கவிதையைக்
கண்டேன் என்றால்
அது நீதான் அன்பே..!

                    *** + ***

வீணை இசைக்காமலேயே
நாதம் எழுகிறதடி
உன் குதுகலப் பேச்சில்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh


உயிரே… உம் என்று சொல்
மணலை மலையாக்குகிறேன்
மடுவை கடலாக்குகிறேன்
கடலை குளமாக்குகிறேன் என்றெல்லாம்
பொய்யுரைக்க விரும்பவில்லை..
நீ என் காதலியானால்...
உன்னுள் நானிருப்பேன்..!
உனக்காகவே வாழ்ந்திருப்பேன்..!
உன் உயிரோடு கலந்திருப்பேன்..!
என் சொல்கிறாய் என்னன்பே..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh




நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!

 lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



அதிகாலையில்
முழு நிலவு உதிக்குமா?
என்று என்னிடம் கேட்டார்கள்...
உதிக்குமென்றேன்..!
'போடா நீ பொய் சொல்கிறாய்..'
என்றார்கள்..!
அதி காலையில்
உன் முழு நிலவு முகத்தைப்
பார்த்த பின்னும்...
பார்க்கவில்லை என்று
என்னால் பொய்யுரைக்க
முடியவில்லையடி அன்பே..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh


என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?


lankesh lankesh lankesh lankesh lankesh lankesh

No comments:

Post a Comment