Tuesday, November 9, 2010

இது கதையல்ல காதல்


முதல் முறையாய் உன்னை அன்று தான் பார்த்தேன். "அழகானதொரு தேவதை பாரடா" என்றான் நண்பன். நான் ஆத்திகன் ஆனது அன்று தான்.

வகுப்பறையில் வாத்தியார் உன்னை எழுந்து நின்று பேச சொல்கையில்,எனக்கு கால் வலிக்க தொடங்கியது. பின்னொரு நாளில் இதை சொல்கையில் நீ சிரித்தாய். "பொய் சொல்லாதே" என்றாய். "ஆமாம். எனக்கு வாயும் வலித்தது" உண்மையை ஒப்புக்கொண்டேன் நான்.

முதல் முறையாக நீ என்னிடம் பேசிய நாள் இன்னும் என் குறிப்பேட்டில் வட்டமிட்டபடி இருக்கின்றது. காதல் என்னிடம் பேச தொடங்கிய நாள்.

நான் உன்னை விரும்புகின்றேன் என்று உன்னிடம் சொன்னதும் நீ அழ தொடங்கினாய். நான் உன் கண்ணீர்துளிகள் தரையை தொடாதபடி தாங்க தொடங்கினேன்.உன் வலிகளை வாங்கிக்கொண்டு என் சிரிப்புகளை பகிர்ந்து கொள்வது காதல் தானடி.

"ஒரு முத்தம் கொடேன்" என்றேன் நான். "ச்சீ போ..மாட்டேன்" செல்லமாய் நீ.
"சரி இரண்டாய் கொடேன்.." நான் கெஞ்ச, என் புகை படத்திற்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றாய். பொறாமையும் கோபமும் ஒரு புகைபடம் மேலே கூட வரும் என அன்று தான் உணர்ந்தேன்.

நான் சொல்லும் யாவற்றையும் உம் கொட்டி கேட்கின்றாய். என்றாவது தெரியுமா உனக்கு? இது கதையல்ல காதல் என்று.



என் காதலை விட
அழகானவள் நீ..
என் கவிதைகளில் எல்லாம்
கருத்தானவள் நீ..

No comments:

Post a Comment