Wednesday, December 8, 2010

love story

குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..

“அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
குழந்தை மாயா சொல்ல வந்த போது. ..
அம்மாவுக்கு சமையல் வேலை,
அப்பா பேப்பரில் பிசி,
அக்காவுக்கு நாவல் சுவாரசியம்
கடைசியில்
டெலிபோன் வந்தபோது.. .
ஸ்கூலில் என்னதான் நடந்தது ?
குழந்தை வாயால் கேட்க மூவருமே காத்திருந்தனர்.
முத்து முத்தாக முகத்தில் வியர்வை தளிர்க்க, ரவிக்கை கசகசக்க, அவசரம் அவசரமாக இரவுச் சமயலை முடிக்கப் போராடிக் கொண்டிருந்தாள் புனிதா.  அவள் பின்னால் வந்து புடவையைப் பிடித்தபடி நின்றாள் மாயா. புனிதா திரும்பவில்லை.  குழந்தை மாயா புடவையை லேசாக இழுத்தாள்.  அவளுக்கு அதைக் கவனிக்க நேரமில்லை.
“அம்மா.. ”
“அம்.. மா.. . இன்னைக்கு ஸ்கூல்லே. ..”
“போ.. . போ.. . வேறே வேலையில்லே உனக்கு. ..”
“இல்லேம்மா. .. இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
“பூனைமேலே ஆனை வந்திருக்கும்.  அதெல்லாம் கேட்க இப்போது எனக்கு நேரமில்லே. .. போ.”
“அம். .. மா டீச்சர்கூட.”
“உனக்கும் வேலையில்லே.. . உங்க டீச்சருக்கும் வேலையில்லே. போய் ஹேhம் ஒர்க்கை கவனி.”
“அதிக்கில்லேம்மா.. . லஞ்சிலே. ..”
“போ.. . அந்தக் கதையெல்லாம் டாடிகிட்டே சொல்லு. எனக்கு கேட்க நேரமில்லே…”
“அம். .மா.”
“இனிமே நீ வாயைத் திறந்தால் உதைதான் கிடைக்கும். போ வெளியே.”
தயங்கியபடி மாயா வெளியேறினாள்.  புனிதா சமையலில் ஆழ்ந்தாள்.  சமையலை முடித்து விட்டு. .. சாப்பாட்டுக் கடை முடிக்கவே மணி எட்டாகிவிடும்.  அதற்குப்பிறகு அவள் ஆபீசிலிருந்து கொண்டு வந்திருக்கும் ஃபைலைப் பார்க்க வேண்டும்.
அப்பா பேப்பரில் ஆழ்ந்திருந்தார்.  காலை ஆறு மணிக்கு வந்த பேப்பரை வேகமாக ஒரு புரட்டு புரட்டி விட்டு, இப்போதுதான் படிக்கத் தொடங்கியிருந்தார்.  அவர் ஆபீசில் பேப்பர் பார்க்க ஏது நேரம் ?
மாயா மெல்ல அவரை நெருங்கினாள்.  அவர் பேப்பரிலிருந்து முகத்தை எடுக்க விரும்பவில்லை.
“அப்பா..  இன்னைக்கு ஸ்கூல்லே.”
“பேப்பர் படிக்கும்போது தொந்தரவு செய்யாதே… ”
“இல்லேப்பா..  இன்னைக்கு என்னை ஸ்கூல்லே.. .”
“டீச்சர் குட் சொல்லித்தட்டிக் கொடுத்தாங்களா. .? பேஷ். . போ. .. போய் படி.”
“அது இல்லேப்பா. . இன்னைக்கு ஸ்கூல்லே.. .”
“நோ. . நோ. .. உங் கதை யெல்லாம் கேட்க இப்ப எனக்கு நேரமில்லே.”
“கதையில்லேப்பா.”
“சரி..  சரி. .. உங்க அக்காகிட்டே போய் சொல்லு.”
மாயா அக்காவை தேடி நகர்ந்தாள்.  அவள் ஙநடுக்காட்டு மாளிகைஙயில் ஆழ்ந்திருந்தாள். நள்ளிரவில் கறுத்த ஓர் உருவம் கையில் துப்பாக்கியுடன் உள்ளே நுழையும் போதுதான், பாவம்; மாயாவும் உள்ளே வந்தாள்.
“மாலாக்கா. .. மாலாக்கா. .. ” மாயா மாலாவின் கையிலிருந்த புத்தகத்தைக் கீழே இறக்கி முகத்தைப் பார்த்தாள்.  புத்தகம் கீழே விழுந்ததில் மாலா காளியானாள்.  “சனியனே நல்ல இடத்திலே வந்து புத்தகத்தைத் தட்டிவிட்டுட்டியே. ..”
“இல்லேக்கா, இன்னைக்கு ஸ்கூல்லே..”
“போ.. போ.. . எனக்கு நெறைய படிக்கணும்.”
“கொஞ்சம் கேளக்கா.. .”
“எதுவுமில்லே நீ போய் படி. . இல்லே படு. ”
அடித்து துரத்தாத தோஷம் தான் மாலா ’நடுக்காட்டு மாளிகைக்குள்’ ஆழ்ந்துவிட்டாள்.
புனிதா சமையலை முடித்து விட்டு, வியர்வையைத் துடைத்தபடி வெளியே வந்தாள்.
“மாலா” அம்மாவின் குரல் கேட்டு புத்தகத்துடன் கீழே இறங்கி ஓடி வந்தாள்.. .
“மாலா! மாயா எங்கே ?”
“நான் பார்க்கலையே… என்னவோ சொல்ல வந்தாள்…” மாலா இழுத்தாள்.
“என்னிடமும்தான்.. . சமையல் வேலை மும்முரத்திலே விரட்டிட்டேனே.. பாவம்.”
“அப்பா..  அப்பா. . மாயா எங்கே ?” மாலாதான் கேட்டாள்.  பேப்பரும் கையுமாக வந்தார் “அங்கே தானேவந்தாள். ..”
“மாயா.. .”
“மா.. யா…”
குரல்கள் வலுத்தன.  பதில் இல்லாமல் போகவே பதட்டம் அதிகரித்தது.
வீட்டின் மூலை முடுக்கெல்லாம் ஓடினர்.  சட்டென்று டெலிபோன் அலறியது.  ஓடிச் சென்று எடுத்தார் உதயமூர்த்தி.
“ஹலோ. . உதயகுமார்தான் பேசுகிறேன்.”
“நாங்க மாயா ஸ்கூல்லே யிருந்து. ..”
“என்ன குழந்தை மாயாவை ஸ்கூல்லே ஏதோ பூச்சி கடுச்சிடுத்தா.  எங்ககிட்டே சொல்லச் சொன்னாங்களா.. .? டாக்டர் கிட்டே அவசரமா கூட்டிப் போகச் சொன்னாங்களா ?  தேங்க்யூ..  உடனே டாக்டர் கிட்டே போறோம்.”
டெலிபோனை வைத்துவிட்டு திரும்பினார்.  அவர் மனைவி முகத்தில் கலவரம் படர்ந்தது மாலா கையில் அந்தக் கதைப் புத்தகம் இல்லை.  தேடல் தொடர்ந்தது.
வாசல் வராந்தாமூலையில் வாடிய பூச்சரம்போல் சுரண்டு கிடந்தாள் மாயா.  ஓடிச்சென்று தூக்கினாள் புனிதா.  முகம் சிவந்திருந்தது.  உடல் அனல் பறந்தது.
உடல் முழுவதும் தடிப்பு தடிப்பாக.. .
“ஐயோ, மாயாகண்ணு உனக்கென்னமா ஆச்சி ஸ்கூல்லே.. .?”
மாயா பதில் சொல்லும் நிலையில் இல்லை.
“மாயா. . மாயா..  பேசும்மா. . பேசு.. . ஸ்கூல்லே என்னம்மா ஆச்சு ?”
மாலா அலறினாள்.  மாயா பேசவில்லை.
டெலிபோனருகே ஓடினார் உதயமூர்த்தி.. . விரல் எண்களை எந்திரத்தனமாய் சுழற்றியது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் கைப்பெட்டியுடன் உள்ளே நுழைந்தார் டாக்டர்.  பரபரப்பாகச் செயல்பட்டார் அவர்.
“நல்ல வேளை இன்னும் அரைமணி நேரம் ஆகியிருந்தால் உயிருக்கு ஆபத்துதான்.”
“கொழந்தை ஏதோ சொல்ல வந்தாள்.  நாங்கதான் வேலை மும்முரத்திலே. ..”
“கொழந்தைங்க சொல்றதை கேக்கறதைவிட முக்கியமான வேலையா ?”
டாக்டர் அவர்களை உரிமையுடன்.  கடிந்துக் கொண்டார்.  அவர்கள் மாயாவைச் சுற்றி ஆவலுடன் நின்று கொண்டிருந்தனர்.
மாயா கண்ணைத் திறந்து ஸ்கூலில் நடந்ததைச் சொல்ல மாட்டாளா என்று.

சின்ன வயசில

சின்ன வயசில நான் நான் வளர்ந்த ஊருக்கு வராமாலே இருந்திருக்கலாம். நான் வளர்ந்த ஊருக்கு வந்த உடனே வேற ஊருக்குப் போயிருந்திருக்கலாம். நான் படிச்ச ஸ்கூலில படிக்காமலே போயிருந்திருக்கலாம்.

இது இப்படி நடந்திருந்தா அது அப்படி நடந்திருந்தா எது எப்படி நடந்திருக்கும்ன்னு யோசிக்கறது என்ன ஒரு முட்டாள்தனம் தான் இல்லையா? இந்த மாதிரி யோசிக்கறதும் புண் பட்ட மனசைப் புகை விட்டு ஆத்தறேன்னு சொல்றதுக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை :-). பல சமயம் இதைக் கேட்டு சிரிச்சிருந்தாலும், முட்டாள்தனம் நினைச்சாலும் புண் பட்ட மனசுக்கு மட்டும் புரியற சிதம்பர ரகசியம் இதுன்னு நினைச்சதும் உண்டு. இதும் அது போலத்தான்னு நினைக்கறேன்.

இப்படி சின்னச் சின்ன விஷயம் கொஞ்சம் கொஞ்சம் மாறி இருந்தாக் கூட உன்னைப் பார்க்காமலே போயிருந்திருக்கலாம். உன்னைப் பார்க்காம இருந்திருந்தா என்ன? வாழ்க்கை என்ன சினிமாவா? உன்னைப் பார்க்காம போயிருந்தா என் வாழ்க்கையே மாறி இருந்திருக்குமுன்னு டயலாக் அடிக்க. இப்ப கொட்டுற குப்பையைத்தான் அப்பவும் கொட்டீட்டு இருந்திருப்பேன்.

உன்னைப் பார்த்ததாலயா அழகான பொண்ணுகளோட நேருக்கு நேர் பார்க்கக் கூட தைரியம் கூட இல்லாம போச்சு? இல்லை உன்னைப் பார்த்ததாலயா பிடிச்ச பொண்களோட பேசக் கூட தைரியம் இல்லாம போச்சு?

உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்னோட முக்கியத்துவம் இல்லாத வாழ்க்கை முக்கியத்துவம் இல்லாமலேயே தான் இருந்திருக்கும். ஒண்ணும் பெரிசா மாறி இருக்கப் போறதில்லை?

கன்னக் குழியோட இருக்கற பொண்ணா இல்லாட்டியும் கன்னக் குழி இல்லாத எதோ ஒரு பொண்ணை எந்த ஸ்கூலுல படிச்சிருந்தாலும் பிடிச்சிருக்கத்தான் போகுது. அறியாப் பருவத்தில புரியா உணர்வு கொள்றதுங்கறது மனுஷன் குரங்கில இருந்து பரிணாம வளர்ச்சி அடையறதுக்கு முன்னாடியே பரிணாம வளர்ச்சி அடைஞ்சிருக்கணும்.

அறியாப் பருவத்து புரியா உணர்வு கூர்மையான மூக்கு கொண்ட பொண்ணு மேல ஏற்பட்டதாலயா படிச்ச ஸ்கூலை விட்டு வேற ஸ்கூல் போன 2 வருசத்துக்கு தொடர்ந்தது? கண்டிப்பா இல்லை அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே. அதுக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லை.

எத்தனை அழகான பொண்ணுங்களைப் பார்த்து தடுமாறினாலும் என் கதைன்னு எப்போ சொன்னாலும் உன் பேரை மட்டும் ஏன் சேர்த்தி சொல்லுறேன்? எனக்குன்னு கதைன்னு ஒண்ணும் இல்லாட்டிக் கூட எனக்குன்னு ஒரு கதை இருந்தா அது உன்னோட மட்டும் தான் இருக்கணும்ன்னு ஒண்ணுமில்லாத அதையே கதையா சொல்லத் தோணுது. ஆனாலும் உன்னைப் பார்க்காம போயிருந்தா கதை சொல்லி இருக்க மாட்டேனா சொன்னாப் அது பொய். அப்படீன்னா நீ இல்லாம போயிருந்தாலும் கதைன்னா கதாபாத்திரம் கண்டிப்பா இருக்கத்தான் போகுது. அப்படீன்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் என்ன பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போகுது?

பேனான்னு ஒண்ணு கைல கிடைச்சா எதையாவது கிறிக்கீட்டே இருக்கற என்னோட பழக்கத்துக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? உன் பேரை அன்னிச்சையாக் கிறுக்காம இருந்திருந்தா வேற எதையாவது கிறிக்கீட்டுத் தான் இருந்திருப்பேன். உன்னைப் பார்க்காமப் போயிருந்தாலும் இதிலயும் பெரிசா வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லை.

ஆழியார் அறிவுத் திருக்கோயில் பஸ் பயணம், எண்ட்ரண்ஸ் எழுதப் போன பஸ் பயணம், நீ என்னை புத்திசாலின்னு உங்க வீட்டுல சொன்னதா எங்கம்மா எங்கிட்ட சொன்னது, monk who sold ferrari புஸ்தகத்தைப் பத்தி சுவாரஸ்யமா ரெண்டு மணி நேரம் பேசின போன் கால், சேர்ந்து பார்த்த சினிமா, வீட்டுல டிராப் பண்ணின பைக் பயணம், வேலைப் பார்க்காம சாட் பண்ணின நாட்கள் இப்படி வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத நினைவுகள் பலதுல நீ இருக்குது உண்மைதான். உன்னைப் பார்க்காம போயிருந்தா இதுக்கு பதிலா வேற நினைவுகள் இருக்காம போயிருக்கும்ன்னு என்னை நானே ஏமாதிக்க முடியாது கண்டிப்பா வேற சில நினைவுகள் இருந்திருக்கும் அது தான் உண்மை.

உண்மை என்னான்னா உன்னைப் பார்க்காம போயிருந்தாலும் பெண்கள் கிட்ட பேசற தயக்கம் கொள்கிற, காதல் பத்தி கனவாப் பேசித் சுத்துற, நடைமுறைக்கு கொஞ்சமும் ஒத்து வராத கற்பனைகள் கொண்ட நான் நானாகவேதான் இருந்திருப்பேன். இதில் இருந்து மாறி அப்படி இருந்திருப்பேன் அப்படி இருந்திருப்பேன்னு சொன்னா அது கண்டிப்பா உண்மை இல்லை.

இதை எல்லாம் ஒத்துக் கொள்கிற முடிந்த என்னால, உன்னைப் பார்க்காமலே இருந்திருந்தாலும் என்னோட அடி மனசில உன்னைத் தான் காதலிச்சுட்டி இருந்திருப்பேன்ங்கற அந்த சிந்தனையை மட்டும் மறுக்கவோ இல்லை அப்படி எல்லாம் இல்லைன்னு மாத்தி யோசிக்க மட்டும் முடியல.

Monday, November 22, 2010

சூரியன்FM

http://www.sooriyanfm.lk/sooriyan_low/sooriyanfmonair.html
உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

lankesh####################################lankesh
 
வாச மலர் தோட்டத்தின்
வண்ண மலர்களிடையே
பாச பிணைப்பில்
நீயும் நானும் 

lankesh####################################lankesh

என் சுவாசத்தின் ஸ்பரிசம் காதல்
நினைவுகளை கனா காண்பதும்
கனவுகளை நியங்களாய் காண்பதும்
காதலின் கர்ப்பத்திலேதான் நிகழ்கிறது
கண்ணிலே விதைக்கப்பட்டு -என்
உயிரிலே வளர்க்கப்படுகிறது
இன்பத்தில் அழுகின்றதும்
துயரத்தில் சிரிக்கின்றதுமாய்
ஒரு இனிய உணர்வு அது
கருவறையில் உயிர் சுமக்கிறாள் தாய்
என் உயிரிலே உயிர்சுமக்கிறேன்
காதலாய்.

Thursday, November 18, 2010


என்னைத்தானே வசியம் செய்தாய்..!
என் பேனாவை எப்படி
வசியம் செய்தாய்..?
பார்… அது எப்போதும்
உன் பெயரையே
கிறுக்கிக் கொண்டிருக்கிறது..!  

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh
 


ஆளரவமற்ற பாலைவனத்தில்
அனாதையாய் உனைத்
தேடுகின்றேன்..!
நீ போன வழியினைத்
தேடித் தேடி
ஓடாய்த் தேய்ந்தபடி
உனைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்..!
ஒவ்வொரு நாள்
சூரியன் உதிக்கும் போதெல்லாம்
என் காதலை எப்படியும்
கண்டு பிடித்துவிடுவேன்
என்ற நம்பிக்கையை மட்டும்
தேய்த்து விடாமல்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh







நான் துவண்டு கிடக்கும் வேளையில்
உன் மலரினும் மெல்லிய
மடியினில் எனைக் கிடத்தி...
என் தலையைக் கோதி தேற்றுவாய்..!
நான் வீழ்ந்து கிடக்கும் வேளையில்
எனை உன் வீணை மார்பில் சாய்த்து...
என் விம்மலைத் தணிப்பாய்..!
நான் கோபித்துக் கிடக்கும் வேளையில்
கொவ்வை இதழ் முத்தம் தந்து...
என் கோபத்தை உடைத்தெறிவாய்..!
இத்தனையும் எனக்குச் செய்யும்
பனி நிறை பவழ மலரவளே..!
என் இன்பத்தில் மட்டுமின்றி...
என் துன்பத்திலும் இருந்தவளே...
இருளில் நான் இருந்தபோது
நிலவாய் வெளிச்சம் தந்தவளே..!
உன்னை நானும் மறப்பேனா..?
உன் நினைவைத் துறந்து இருப்பேனா..?
மறந்தும் உயிரோடிருப்பேனா..?
நிலவைப்பிரிந்து என்றும் நீலவானம் இராது..!
அதுபோலத்தான் பெண்ணே நானும்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



நீ யார்..?
என்ன உன் பேர்..?
ஏது உந்தன் ஊர்..?
இவைகளை நான்றியேன்…
ஆனால்…
உனைப் பார்த்த வினாடியிலிருந்து
இனி நீதான் நான்…
உன் பேர்தான் இனி என் பேர்…
உன் ஊர்தான் இனி என் ஊர்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh





உன்னை நினைத்தாலே போதும்
என் பேனாவிற்கு…
உடனே அது காகிதத்தை
முத்தமிடத் தொடங்குகிறது..!
உனைப் பற்றி
கவிதையாய் வடிப்பதற்கு..!
உன்னை நான் நேரில்
சந்தித்தால் போதும்…
உடனே உன் செவ்விதழில்
முத்தமிடத் தோன்றுகிறது…
உன்னைப் போன்றதொரு
அழகான கவிதையைப் படைப்பதற்கு..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh




உனக்குத் தாலாட்டுப் பாட...
நிலவை உன்னறைக்குள்
வரும்படி அழைத்தேன்…
வெள்ளி நிலவும்
வெளிச்சப் புன்னகையோடு
இசைந்தது..!
உன்னறைக்குள் நுழைந்தது..!
உனைப் பார்த்ததும்
உறைந்து போனது நிலா…
காரணம்..?
நிலவின் 'க்ளோனாம்' நீ..! 

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



உலகிலேயே மிகவும்
அழகான கவிதை ஒன்று
சொல் என்றார்கள்..!
நான் உன் பெயரை மட்டும்தான்
சொன்னேன்..!
அதற்கே அசந்து விட்டார்கள்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



நீ என்னருகில் இருக்கும் வரை
உலகத்தையே மறந்திருக்கிறேன்..!
நீ என்னை விட்டு்ப் பிரிந்து சென்றால்
இந்த உலகமே என்னை மறக்கும்படி
செய்து கொள்கிறேன்..!
ஏனடா எனக்கிந்த காதல் வேதனை..?

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh




என்னை மட்டுமல்ல
என் நினைவுகளையும் சேர்த்து
வசியம் செய்திருக்கிறாய்
என்பதை…
நீ என்னருகே
இல்லாத போதுதான்
உணர்ந்து கொண்டேன்..!

                    *** + ***

பெண்ணே…
உன் மீன் விழிகளை
மூடிக் கொள்..!
மீனவன் வலையுடன்
வந்து கொண்டிருக்கிறான்..!

                    *** + ***
அழகின் சிகரம் நீ…
அறிவின் சிகரம் நீ…
பெண்மையின் சிகரம் நீ…
பேரழகின் சிகரம் நீ…
பொறுமையின் சிகரம் நீ…
பொய்மையின் சிகரம்..?
வேறு யார்… நான்தான்..!

                    *** + ***

நடமாடும் நூலகத்தைக்
கண்டேன்
நடமாடும் வங்கியைக்
கண்டேன்
நடமாடும் கவிதையைக்
கண்டேன் என்றால்
அது நீதான் அன்பே..!

                    *** + ***

வீணை இசைக்காமலேயே
நாதம் எழுகிறதடி
உன் குதுகலப் பேச்சில்..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh


உயிரே… உம் என்று சொல்
மணலை மலையாக்குகிறேன்
மடுவை கடலாக்குகிறேன்
கடலை குளமாக்குகிறேன் என்றெல்லாம்
பொய்யுரைக்க விரும்பவில்லை..
நீ என் காதலியானால்...
உன்னுள் நானிருப்பேன்..!
உனக்காகவே வாழ்ந்திருப்பேன்..!
உன் உயிரோடு கலந்திருப்பேன்..!
என் சொல்கிறாய் என்னன்பே..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh




நான் பிறந்த பிறப்பின் பயனை
முதன்முதலில் உனைச் சந்தித்த
போதுதான் தெரிந்தது..!
அழகென்பது முகத்தில் இல்லை
அகத்தில்தான் இருக்கிறது என்பதே
உன்னுடன் பழகிய போதுதான் தெரிந்தது..!
பிரிவென்பது கொடும் நோயென்று
எனை விட்டு நீ பிரிந்த போதுதான் தெரிந்தது..!
ஆதலால் அன்பே…
எனை விட்டுச் செல்லாதே…
பிரிந்து சென்றெனைக் கொல்லாதே..!

 lankesh lankesh lankesh lankesh lankesh lankesh



அதிகாலையில்
முழு நிலவு உதிக்குமா?
என்று என்னிடம் கேட்டார்கள்...
உதிக்குமென்றேன்..!
'போடா நீ பொய் சொல்கிறாய்..'
என்றார்கள்..!
அதி காலையில்
உன் முழு நிலவு முகத்தைப்
பார்த்த பின்னும்...
பார்க்கவில்லை என்று
என்னால் பொய்யுரைக்க
முடியவில்லையடி அன்பே..!

lankesh lankesh lankesh lankesh lankesh lankesh


என் கண்ணில் மலர்ந்து
என்னுள் நுழைந்து
என்னவளாய் ஆனவளே..!
என் உறவில் கரைந்து
என் எழுத்தில் நிறைந்து
என் கவிதையுமாய் ஆனவளே..!
ஒவ்வொரு கணமும்
உன்னைத்தானடி
தேடிக் கொண்டிருக்கிறேன்..?
இத்தனை நாளாய்
எங்கிருந்தாய்..?
உனக்காக இங்கொருவன்
பிறப்பெடுத்திருக்கிறான்
என்பதை அறியாமல்
இத்தனை நாளாய்
நீ எங்கிருந்தாய்..?


lankesh lankesh lankesh lankesh lankesh lankesh

Tuesday, November 16, 2010

"நீ இல்லாமல் என்னால்
உயிர் வாழ முடியாது" என்று
நீ சொல்வதை
நம்பமாட்டேன்.
நீ பிறந்து மூன்று
வருடங்கள் கழித்துதானே
நான் பிறந்தேன்.
அந்த மூன்று வருடங்கள்
நான் இல்லாமல்தானே
நீ உயிர்
வாழ்ந்திருக்கிறாய்!?